Social Icons

Mobile

Wednesday, November 14, 2012

கணணியின் கமெராவை பாதுகாப்பு கமெராவாக பயன்படுத்த !

உங்கள் கணணியில் உள்ள கமெராவினை பயன்படுத்தி நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ உரையாடலுக்கு பயன்படித்தியிருப்பீர்கள் மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு பயன்படுத்தியிருக்கலாம்.
உங்கள் கணணியில் உள்ள கமெராவினை பாதுகாப்பு(secruity) கமெரவாக எந்த உபகரணமோ அல்லது மென்பொருளோ இன்றி இணைய இணைப்பின் மூலம் மாற்றியமைக்க முடியும்.

இந்த மாற்றத்தினை செய்ய CAMMSTER .COM என்ற இணையம் உதவுகிறது. இந்த தளத்துக்கு சென்று PROTECT என்பதை கிளிக் செய்தால் உங்கள் பதிவு கோரப்படும்.

அதிலே உங்கள் மின்னஞ்சல் மற்றும் கடவுச்சீட்டு கொடுத்து பதிவு செய்து கொண்டால் உங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் கணக்கிற்கு செய்தி அனுப்பப்படும்.

அந்த சரிபார்ப்பு கோட்டின் மூலம் திறந்து கொண்டால் தற்போது தோன்றும் விண்டோவில் Cammster, Run Cammster Now பட்டன்களை முறையே கிளிக் செய்தல் வேண்டும்.

இப்போது உங்கள் வெப்கேம் செயற்படுத்துவதற்கான அனுமதி கோரப்படும் அதை ALLOW செய்தால் உங்கள் கணணியில் உள்ள கமெரா பாதுகாப்பு கமெராவாக செயற்பட்டும்.

எந்தவொரு அசைவு மாற்றங்களையும் படம் பிடித்து உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு படங்களாக அனுப்பி வைக்கும். அத்துடன் ஒலியினையும் ஏற்படுத்துவதுடன் பாதுகாப்பு வசதியினையும் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment