கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறை இப்போதுதான் நமக்கு முழுமையாக கிடைத்தாலும், இணையத்தளங்களில் இலவசமாகவும் கட்டணம் செலுத்தியும் கோப்புகளை சேவ் செய்து வைத்திடும் வசதி பல ஆண்டுகளாய் நமக்குக் கிடைத்து வருகிறது.
நாம் உருவாக்கும் அனைத்து கோப்புகளையும், நமக்குக் கிடைக்கும் எல்லாவிதமான கோப்புகளையும் நம் பெர்சனல் கணனியின் ஹார்ட் டிஸ்க் அல்லது பிளாஷ் ட்ரைவ், சிடி, டிவிடிக்களில் சேவ் செய்து வைக்கலாம்.
ஆனால் பதிவினை வாங்கிக் கொள்ளும் இந்த மீடியாக்கள் எல்லாம், என்றாவது ஒரு நாளில் கெட்டுப் போய் கோப்புகளை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
எனவே இத்தகைய மீடியாக்களில் சேவ் செய்து வைப்பதுடன், சேவ் செய்து பாதுகாத்து தேவைப்படும் போது எடுத்துக் கொள்ளும் வசதியினைத் தரும் இணையத்தளங்களிலும் நம் கோப்புகளை சேவ் செய்து வைத்திடலாம். அத்தகைய சேவை தரும் தளங்களை இங்கு காணலாம்.





