Social Icons

Mobile

Featured Posts

Wednesday, December 19, 2012

அறிமுக அட்டை (Visiting Carயாரிக்க !


இந்தக்காலத்தில், வர்த்த‍கர்களானாலும் சரி, நிறுவன ஊழியர்களா னாலும் சரி, நமக்கு ஓரு அறிமுகம் தேவைப்படுகிறது. இதே நமது

நண்பர் அவரது அலுவலகத்திற்கோ அல்ல‍து அவருக்கு நெரிந்த நிறுவனத்தி ற்கோ நம்மை அழைத்து சென்று அங்கி ருக்கும் அவரது நண்பர்களுக்கு அறிமு கம்செய்து வைப்பார். பிற்காலத்தில் இந் த அறிமுகமே நமது வாழ்வில் ஏற்ற‍ம டைய உதவுவதாகவும் இருக்கும். அல்ல‍ வா?
ஆனால் ஒரு புதிய நபரை, புதிய நிறுவனத்திற்கு சென்று அவரை சந் திக்க‍ நேரிடும்போது, அவரது உதவியாளரிடம் நம்மை பற்றிய முழு அறிமுகத்தை சொல்லி, அதை அந்த உதவியாளர் நாம் அவரிடம் தெரிவித்த‍ அத்த‍னை விவரங்களை நாம் பார்க்க‍ வேண்டிய நபரிடம்முழுவதுமாக சொல்வார் என்பது என்ன‍ நிச்ச‍யம்! அவ ரை நாம் பார்க்காமல் நம் மை பற்றிய முழு அறிமுகமும் செய்து கொள்ள‍ அறிமுக அட்டை (visiting card) என்ற ஒன்று பயன்படும் இது இன்றைய உலகில் இன்றியமையாத வைகளில் ஒன்றாகவே மாறிவிட்ட‍து. (அதில் நம் மை பற்றி விவரங்களை படிப்பவர்கள் எளிதாக புரிந்து கொள்ளு ம் வகையில் சுருக்க‍மாக வித விதமான வண்ண‍ங்களில் அச்சிட்டப் பட்டிருக்கும் ) நாம் பார்க்க‍ விரும்பிய அந்த நபர் நமது அறிமுக‌ அட் டையை படித்து ப்பார்த்து நம் மை உள்ளே அழைத்து, அமர வைத்து, பண்போடு உரையாடுவா ர். நாம் எதற்காக அவரை சந்திக்க‍ சென்றோமோ அந்த வேலையும் எளிதா க முடிகிறதல்ல‍வா! அத் தகைய அறிமுக அட்டை யை எந்தளவுக்கு சிறப் பாக அச்சிட வேண் டாமா?
நம்மை அறிமுகப்படுத்தும் அந்த அறிமுக அட்டையை எப்ப‍டி எந்தவடிவத்தில் எந்த மாதிரியான எழு த்துக்களில் எந்த முறையில் வடி வமைப்ப‍து என்ற குழப்ப‍த்தில் இரு ப்போருக்கு நல்ல‍தோர்வழியினை காட்டுகிறது இந்த இணையம் ஆம் ! அறிமுக அட்டையின் மாதிரிக ளை இந்த இணையம் வெளியிட்டு ள்ள‍து. அந்த மாதிரிகளை கண்டு உங்களை வேண்டிய அறிமு க அட் டையின் மாதிரிகளை எடுத்துக்கொள்ள‍லாம். சில வடிவமைப்புக்க ளை இலவசமாகவும், சிறப்பான வடிவமைப்புகளை கட்ட‍ணம் செலு த்தியோ பெற்றுக் கொள்ள‍லாம்.

Sunday, November 18, 2012

இணையத்தில் இலவசமாக Files கலை save செய்திட இணைய தளங்கள் !



கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறை இப்போதுதான் நமக்கு முழுமையாக கிடைத்தாலும், இணையத்தளங்களில் இலவசமாகவும் கட்டணம் செலுத்தியும் கோப்புகளை சேவ் செய்து வைத்திடும் வசதி பல ஆண்டுகளாய் நமக்குக் கிடைத்து வருகிறது.
நாம் உருவாக்கும் அனைத்து கோப்புகளையும், நமக்குக் கிடைக்கும் எல்லாவிதமான கோப்புகளையும் நம் பெர்சனல் கணனியின் ஹார்ட் டிஸ்க் அல்லது பிளாஷ் ட்ரைவ், சிடி, டிவிடிக்களில் சேவ் செய்து வைக்கலாம்.
ஆனால் பதிவினை வாங்கிக் கொள்ளும் இந்த மீடியாக்கள் எல்லாம், என்றாவது ஒரு நாளில் கெட்டுப் போய் கோப்புகளை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
எனவே இத்தகைய மீடியாக்களில் சேவ் செய்து வைப்பதுடன், சேவ் செய்து பாதுகாத்து தேவைப்படும் போது எடுத்துக் கொள்ளும் வசதியினைத் தரும் இணையத்தளங்களிலும் நம் கோப்புகளை சேவ் செய்து வைத்திடலாம். அத்தகைய சேவை தரும் தளங்களை இங்கு காணலாம்.

Wednesday, November 14, 2012

கணணியின் கமெராவை பாதுகாப்பு கமெராவாக பயன்படுத்த !

உங்கள் கணணியில் உள்ள கமெராவினை பயன்படுத்தி நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ உரையாடலுக்கு பயன்படித்தியிருப்பீர்கள் மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு பயன்படுத்தியிருக்கலாம்.
உங்கள் கணணியில் உள்ள கமெராவினை பாதுகாப்பு(secruity) கமெரவாக எந்த உபகரணமோ அல்லது மென்பொருளோ இன்றி இணைய இணைப்பின் மூலம் மாற்றியமைக்க முடியும்.

இந்த மாற்றத்தினை செய்ய CAMMSTER .COM என்ற இணையம் உதவுகிறது. இந்த தளத்துக்கு சென்று PROTECT என்பதை கிளிக் செய்தால் உங்கள் பதிவு கோரப்படும்.

அதிலே உங்கள் மின்னஞ்சல் மற்றும் கடவுச்சீட்டு கொடுத்து பதிவு செய்து கொண்டால் உங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் கணக்கிற்கு செய்தி அனுப்பப்படும்.

அந்த சரிபார்ப்பு கோட்டின் மூலம் திறந்து கொண்டால் தற்போது தோன்றும் விண்டோவில் Cammster, Run Cammster Now பட்டன்களை முறையே கிளிக் செய்தல் வேண்டும்.

இப்போது உங்கள் வெப்கேம் செயற்படுத்துவதற்கான அனுமதி கோரப்படும் அதை ALLOW செய்தால் உங்கள் கணணியில் உள்ள கமெரா பாதுகாப்பு கமெராவாக செயற்பட்டும்.

எந்தவொரு அசைவு மாற்றங்களையும் படம் பிடித்து உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு படங்களாக அனுப்பி வைக்கும். அத்துடன் ஒலியினையும் ஏற்படுத்துவதுடன் பாதுகாப்பு வசதியினையும் கொண்டுள்ளது.

ஓன்லைன் வீடியோ சட்டிங் செய்ய சிறந்த தளங்கள்

நவீன காலத்தில் ஓன்லைன் வீடியோ சட்டிங் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பிரபல்யமானதாகவும் காணப்படுகின்றது.
இதுவரை காலமும் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கிலும், ஸ்கைப் போன்றவற்றிலும் வீடியோ சட்டிங் செய்து சலிப்பு ஏற்பட்டிருக்கும்.
எனவே அறிமுகம் இல்லாத புதிய நபர்களுடன் வீடியோ சட்டிங் செய்ய விரும்புவீர்கள். அதற்கான  வசதியை சில இணையத்தளங்கள் தருகின்றன. அவற்றைப்பற்றி இங்கு பார்ப்போம்.
1. Omegle: இத்தளமானது 2009ம் ஆண்டு 18 வயதுடைய இளைஞனால் உருவாக்கப்பட்டது. இங்கு சட் செய்யும் போது எந்தவிதமான பதிவுகளும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தளத்திற்கு விஜயம் செய்ததும் ஒருவருடன் சட் செய்வதற்கான இணைப்பு ஏற்படுத்தப்படும்.
http://www.omegle.com/
2. ChatRoulette: இது ரஷ்யாவை சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவனால் உருவாக்கப்பட்ட தளமாகும். இத்தளத்தை பயன்படுத்துவதற்கு வயது வரையறைகள் இல்லை. ஆனால் சட் செய்யும் முன்பு தங்களை பதிவு செய்தல் அவசியமாகும்.
http://chatroulette.com/
3. Rounds: ஏனைய தளங்களை விட இங்கு அதிகளவு வசதிகள் காணப்படுகின்றன. அதாவது சட் செய்வதை தவிர  ஓன்லைன் கேம், Mp3 பாடல்களை கேட்டல், youtube வீடியோக்களை பார்க்க கூடியவாறு இருத்தல் போன்ற வசதிகள் காணப்படுகின்றன. இத்தளத்தின் மூலம் 18 வயதிற்கு மேற்பட்டவர்களே சட் செய்ய முடியும்.

இணையம் மூலம் கோப்புகளை பகிர்வதற்கு

இணையம் மூலமாக கோப்புகளை எளிதில் பகிர்ந்து கொள்ளுவதற்கு பல்வேறு இணையத்தளங்கள் உதவி புரிகின்றன.
இதற்கு பைல்பிரண்ட் என்ற இணையத்தளம் பெரும் உதவி புரிகின்றது. இந்த இணையம் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
இந்த தளத்தில் கோப்புகளை பகிர்ந்து கொள்ளும் போது அவற்றை பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் தொடர்புகளோடும் பகிர்ந்து கொள்ளலாம். இதன் காரணமாக நீங்கள் பதிவேற்றும் கோப்புகளை உங்கள் நண்பர்களும் பார்க்கலாம், தரவிறக்கம் செய்யலாம்.
பொதுவாக கோப்புகளை பகிரும் தளங்களில் குறிப்பிட்ட கோப்பை பதிவேற்றம் செய்து விட்டு அதற்கான இணைய முகவரியை யாருக்கு பகிர வேண்டுமோ அவர்களுக்கு இணையத்தின் முகவரியை அனுப்பி வைத்தால் அந்த முகவரியை கொண்டு உரிய கோப்பை அவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பைல் பிரண்ட் தளத்தில் நேரடியாகவே நண்பர்கள் வட்டத்தில் கோப்புகளை பகிர்ந்து கொள்ளலாம். பைல் பிரண்டில் கோப்புகளை பதிவேற்றுவது மிகவும் சுலபம். பதிவேற்றிய பின் பயனாளிகள் தங்களின் பேஸ்புக் உட்பட பல்வேறு சமூக வலைப்பின்னல் சேவைகளில் அதனை இணைத்துவிடலாம்.
இதன் மூலம் அவர்கள் நட்பு வட்டத்தில் உள்ள அனைவரும் அந்த கோப்பை பெற முடியும். கோப்புகளை பகிர்ந்து கொள்ளாமல் அதனை சேமித்தும் வைக்கும் வசதியும் உள்ளது.

இலவசமான ஒன்லைன் சேமிப்பு வசதி

  தற்போது காணப்படும் விண்டோஸ், கூகுள் என்பவற்றின் ஒன்லைன் சேமிப்பு வசதிகளைப் போன்று LG நிறுவனமும் ஒன்லைன் சேமிப்பு வசதியை அதன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
அதாவது LG Smartphone, LG Smart TV பயனர்களுக்கு 5 GB வரையிலான சேமிப்பு கொள்ளளவு கொண்ட இடத்தினை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.
இவ்வசதியின் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள், பாடல்கள் போன்றவற்றின் குறிப்பிட்ட சில வகை கோப்புக்களை தரவேற்றம் செய்ய முடியும்.
மேலும் தனது பிரீமியம் பயனர்களுக்கான முதல் ஆறு மாதங்களும் 50 GB இலவச ஒன்லைன் சேமிப்பகத்தை வழங்கும் திட்டத்தினையும் GB நிறுவனம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Wednesday, November 7, 2012

ஆன்லைனில் மூவி எடிட்டிங்


 

  • நீங்களாகவே தயாரித்த உங்களுடைய ஹோம் மூவீஸ்களுக்கு மெருகூட்ட திட்டமிடுகிறீர்களா? ஆன்லைனில் இந்த வேலைகளை மிக எளிதாக மேற்கொள்ள உதவுகிறது pixorial.com என்னும் இணைய தளம். எப்படி படங்களுக்கு அடோப் போட்டோ ஷாப் அல்லது அண்மைக் காலத்திய அப்ளிகேஷன் சி.எஸ். 4 உதவுகிறதோ, அதே போல பிக்ஸோரியல் என்னும் இந்த தளம் அனைத்து டூல்களையும் தருகிறது.


நம் வீடியோ பைல்களுக்கு இந்த தளம் 10 ஜிபி இடம் தருகிறது. 800 எம்பி வரையிலான அளவில் எந்த பார்மட்டிலும் வீடீயோ பைல்களை அனுப்பி மெருகூட்டலாம். AVI, FLV, MP4, MPEG, DV, மற்றும் WMV என அனைத்து வகை பார்மட் பைல்களையும் இந்த தளம் ஏற்றுக் கொள்கிறது.

உங்கள் வீடியோ பைலை இந்த தளத்தில் அப்லோட் செய்தவுடன், இந்த தளம் தரும் எளிய ஆன்லைன் எடிட்டரைப் பயன்படுத்தலாம். கிளிப் காட்சிகளை எப்படி இணைப்பது என்ற வரிசையைக் காட்டலாம். இதனை ஒரு ஸ்டோரிபோர்டாக அமைக்கலாம். பின்னர் ஒவ்வொன்றுக்கும் நேரம் அமைப்பது, தோன்றி மறைவது போன்ற எபக்டுகளைத் தரலாம். தலைப்புகளை அமைக்கலாம். மொத்தமாக அனைத்து முடிந்த பின்னர், மூவியினை அதிகமான அல்லது குறைந்த ரெசல்யூசனில் வடிவமைத்து டவுண்லோட் செய்திடலாம். நீங்கள் விரும்பினால் பின்னர் இதனை எந்த சோஷியல் நெட்வொர்க் தளங்களிலுல் பதியலாம். அல்லது டிவிடியில் காப்பி செய்திடலாம்.

முதலில் இந்த தளத்தில் நுழைந்தவுடன், உங்களுக்கென உள்ள இமெயில் அக்கவுண்ட் மற்றும் அதற்கான பாஸ்வேர்ட் கொடுத்து அக்கவுண்ட் ஒன்று தொடங்க வேண்டும். பின்னர் காட்டப்படும் விண்டோவில் மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். உங்கள் ஹோம் வீடியோ பைலை அப்லோட் செய்வது, உங்களுடைய ஷாவினை நீங்களே உருவாக்குவது மற்றும் உங்கள் படைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது.

உங்களுக்கென இந்த தளத்தில் தரப்படும் 10 ஜிபி இடத்தில் உங்கள் வீடியோக்களைப் பதிந்து வைக்கலாம். அல்லது உங்களுக்குப் பிரியமான சோஷியல் நெட்வொர்க் தளங்களில் பதிந்து வைக்கலாம்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்